Now Reading
ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப்

ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப்

karate

கோவையில் நடைபெற்ற ஆல் இந்தியா மோசஸ் நினைவு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு அசத்தல்.

கோவையில் ஆல் இந்தியா மோசஸ் மெமோரியல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, அவினாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஜி.ஆர்.டி.தற்காப்பு கலை மையம் மற்றும் அலன் திலக் கராத்தே பள்ளி ஆகியோர் இணைந்து நடத்திய இந்த போட்டியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா ஜி.ஆர்.டி.தற்காப்பு கலை மையத்தின் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அலன் திலக் கராத்தே பள்ளியின் நிறுவனர் நீல் மோசஸ் மற்றும் உஷா மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஜி.ஆர்.டி.தற்காப்பு கலை மையத்தின் செயலாளர் ஸ்கந்தா வரதராஜ், அலன் திலக் கராத்தே பள்ளி இயக்குனர்கள் பால் விக்ரமன், தேவராஜ் மற்றும் ராஜ்குமார், வீரமணி, சினோத்பாலசுப்ரமணியம், விஜயராகவன், மகேஸ்வரன், பி.பாலசுப்பிரமணியம், ஜி.ஆர்.டி.கல்லூரி முதல்வர் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

See Also
psgrkcw

போட்டிகளில் 5 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், , அதற்கு மேல் உள்ள வயதினருக்கு பொதுப்பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.

கட்டா,குமித்தே என இரு வேறு பிரிவுகளில், தனிநபர் சண்டை, குழு சண்டை, தனிநபர் கட்டா, குழு கட்டா போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்,வீராங்கனைகளுக்கு பரிசுகள்,
சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி கவுரவிக்க இருப்பதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top