Now Reading
கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்  கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட குழு  மற்றும் தமிழ்நாடு வனத்துறை,  கோயம்புத்தூர் கோட்டம் ஆகியவை இணைந்து உலக வன தினம் -2024 ஐ முன்னிட்டு    “இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை” கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடு செய்தது .

இந்த நிகழ்ச்சிக்காக, கோயம்புத்தூர் சிறுமுகை சமூக வனத்துறை வனச்சரக அலுவலர் திரு.பி.ரமேஷ் மற்றும் குழுவினர் கல்லூரி  வளாகத்திற்கு வருகை தந்து, விழிப்புணர்வு, வன வளங்களை பாதுகாத்தல், மரம் வளர்ப்பு பற்றி  கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகின்றனர். இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ரேஞ்சர் வலியுறுத்தினார்.

See Also
psg allied health sciences

இந்த  நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் அவர்கள் கலந்துகொண்டு பேசும்போது வனங்களின் தேவை மற்றும் வன உயிரினங்கள் குறிப்பாக  சிறியது முதல் பெரியது வரையிலான தாவர   மற்றும் விலங்கு இனங்களை  பாதுகாத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார், இதில் ,  கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர் .

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top