Now Reading
உலக சாதனை வெற்றி! செஃப் அஜித் குமார் மற்றும் செஃப் சமீமா புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்

உலக சாதனை வெற்றி! செஃப் அஜித் குமார் மற்றும் செஃப் சமீமா புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்

பேஸ்ட்ரி கலையில் இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தும் வகையில், செஃப் அஜித் குமார். கே மற்றும் செஃப் சமீமா டி.எஃப் விரைவான ரொசெட் ஐசிங் செய்ததில் கின்னஸ் உலக சாதனை வெற்றிகரமாக படைத்துள்ளனர். கேக் அலங்கார கலையில் இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்தும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், செஃப் அஜித் குமார் கே. மற்றும் செஃப் சமீமா டி.எப். உலகின் வேகமான ரோசெட் ஐசிங் தொடர்பான புதிய கின்னஸ் உலக சாதனை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனை முயற்சி 23 பிப்ரவரி 2025 அன்று நடைபெற்றது, இதில் அவர்கள் தலா 42 கேக்குகளை ஐசிங் செய்து, மொத்தம் 84  கேக்குகளை வெறும் ஒரு நிமிடத்தில் அலங்கரித்து முந்தைய சாதனையை முறியடித்தனர்.

இந்த சாதனையானது இந்தியாவின் பேஸ்ட்ரி மற்றும் உணவகத் துறையில் ஒரு முக்கிய தருணமாகும். இவர்கள் பேஸ்ட்ரி கலையின் சிறப்பை உலகளவில் எடுத்துக்காட்டி,  சமையல் கலைஞர்களுக்கு புதிய இலக்குகளை அமைத்துள்ளனர்.

இந்த சாதனையை,  சமையல் கலைஞர்கள்   நேரில் வந்து பாராட்டினர்.  இது உணவகத் துறையில் ஒரு புதிய கருவாக அமைந்து, எதிர்கால சமையல் கலைஞர்களுக்கு உத்வேகம்  அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top