Now Reading
ஒரு ரூபாயில் டாக்சி சவாரி ஓகேபாஸ் அறிமுக சலுகை

ஒரு ரூபாயில் டாக்சி சவாரி ஓகேபாஸ் அறிமுக சலுகை

கோயம்புத்துார், ஜனவரி 21: 2025 பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஓகேபாஸ் (okboz) செயலியை பதவிறக்கம் செய்து கொண்டால், பிப்ரவரி 1 முதல் 28 வரை சிறப்பு சலுகையாக ஒரு ரூபாய்க்கு டாக்சியில் பயணம் செய்ய முடியும்.

கோவையில் அறிமுகம் செய்யப்படும் இந்த செயலின் சிறப்புகள் குறித்து தலைமை செயல் இயக்குனர் செந்தில் கூறியதாவது:

கோயம்புத்துாரில் ஓகேபாஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். அறிமுகமான பின் இது வரை 1000 பேர் பதவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளனர். இதன் முதல் சேவையாக கால் டாக்ஸி சேவையை செயல்படுத்த உள்ளோம். பிப்வரி 1 முதல் பிப்ரவரி 28 வரை இதில் புக்கிங் செய்து பயன்படுத்துவோருக்கு முதல 2.5 கி.மீ.,க்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம். அடுத்து வரும் கிலோ மீட்டருக்கு வழக்கமான கட்டணம் இருக்கும்.

இந்த புதிய செயலில் 50 வகையான சேவைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இலவச ஆம்புலன்ஸ் உடனும் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம் கோவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். 2025 ஆண்டுக்குள் ஒரு லட்சம் பயனாளர்களாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களிலும் சேவைகள் வழங்க உள்ளோம்.

ஓகேபாஸ் செயலியால் அனைவரும் எளிதாக சேவைகளை பெற வேண்டும். முதல் சேவையாக டாக்சி சேவையின் அறிமுகமாக ரூ.1 முதல் பயண சலுகை அளிக்கிறோம். கோயம்புத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சலுகையை அளிக்கிறோம், இவ்வாறு, ஓகேபாஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செந்தில் கூறினார்.

See Also
marathon

கோயம்புத்தூரில் உள்ள ஓகேபாஸ் டாக்சி சேவையின் புதிய பயனர்கள் இந்த சேவையை பெறலாம். ஓகே பாஸ் செயலியை பதிவிறக்கம் செய்து, முதல் டாக்சி சேவையை முன்பதிவு செய்யலாம். ஓகேபாஸ்

செயலியின் முக்கிய அம்சங்கள்:
1. இலவச ஆம்புலன்ஸ் சேவை: அவசர மருத்துவ உதவிகளை வழங்க முக்கியத்துவம்.
2. ஓகேபாஸ் டாக்சி சேவை: நகரப் பயணத்திற்கு மிதமான மற்றும் நம்பகமான சேவை.
3. 50 சேவை வகைகள்: வீட்டு பழுது சரி செய்வது முதல் அழகுசாதனை சேவைகள் வரை விரிந்த சேவைகள்.
4. பயனர் நெகிழ்வான செயலி இடைமுகம்: விரைவான முன்பதிவு மற்றும் எளிதான உலாவல்.
5. சான்றிடப்பட்ட தொழிலாளர்கள்: நம்பகத்தன்மை மற்றும் தரத்தைக் கருதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
6. எதிர்கால விரிவாக்கம்: திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு விரைவில் விரிவாக்கம்.

2025ல் திரு. செந்தில் அவர்களால் நிறுவப்பட்ட ஓகேபாஸ் கோயம்புத்தூர் மையமாகக் கொண்ட பல்சேவை செயலி ஆகும். டாக்சி சேவைகள், இலவச ஆம்புலன்ஸ், மற்றும் 50 சேவை வகைகள் ஆகியவற்றுடன், ஓகேபாஸ் மக்களுக்கு நம்பகமான தீர்வுகளை வழங்க முன்னணியில் செயல்படுகிறது

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top