Now Reading
காலிங்கராயன் அணைக்கு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி . மாணவர்கள் களப்பயணம்

காலிங்கராயன் அணைக்கு வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி . மாணவர்கள் களப்பயணம்

வி.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஈரோடு. கல்லூரியின் தலைவர் திரு.எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் திரு.ர.சரவணன் மற்றும் நிர்வாக அதிகாரி திரு.எஸ்.லோகேஷ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக இரண்டாவது நாளாக 10.11.2022 அன்று 730 ஆண்டுகளுக்கு மேலான காலிங்கராயன் அணைக்கு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 மாணவர்கள் பங்குகொண்டனர். இந்நிகழ்வை  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ந. மகாதேவி மற்றும் முனைவர் த.தினேஷ் அவர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். உழவன் அறக்கட்டளை, குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, யங் இந்தியா அமைப்பினர் ஆகியோர் இணைந்து நீரும் நாமும் என்ற திட்டத்தின்கீழ் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

இதில் காலிங்கராயன் குறித்த வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், அந்த அணை குறித்த செய்திகள் ஆகியவற்றை இயற்கை ஆர்வலர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் விளக்கினார். மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் காலிங்கராயன் வரலாற்றை அறிந்து கொண்டனர் மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் குறித்த வரலாறுகளையும் அறிந்து கொண்டனர்.

See Also

 

What's Your Reaction?
Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top