Now Reading
குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா

குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா

global arts academy

குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி கலையரங்கத்தில் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.

global arts academy

நிகழ்ச்சிக்கு குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியில் நிறுவனர் பிரதீஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி பரதநாட்டிய கலைஞர்களுக்கு தேர்வுகளை நடத்தி, அவர்களுக்கு டிப்ளமோ, இளநிலை, முதுகலை பட்டங்களை வழங்கி வருகிறது. தொடர்ந்து நிகழ்ச்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடனம் பள்ளிகளை நடத்தி வரும் நடனப்பள்ளி ஆசிரியர்கள் 27 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டது.

global arts academy

See Also
Sharadha skill academy

விழாவில் பரதநாட்டிய கலைஞர்கள் பல்வேறு பாடல்களுக்கு நடனங்களை ஆடி அசத்தினர். நிகழ்ச்சியில் குளோபல் ஆர்ட்ஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதேவி பிரசாத், பரதநாட்டிய கலைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top