Now Reading
கேபிஆர் பொறியியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் துறை தொழில் வல்லுநர்கள் மாநாடு

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் கட்டிட பொறியியல் துறை தொழில் வல்லுநர்கள் மாநாடு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டிட பொறியியல் துறை சார்பில் ‘இண்டஸ்ட்ரி கான்கிளேவ் 2024’ என்ற பெயரில் தொழில் வல்லுநர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட யுஆர்சி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. கபிலன் தேவராஜன் அவர்கள் கட்டிடப் பொறியியல் தான் என்றும் செழிப்பாக உள்ள துறை, எந்த துறையும் கட்டிட பொறியியல் துறையோடு இணைந்து பணியாற்றலாம் என்று பேசினார். மேலும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ள மிகப்பெரிய அளவிலான கட்டுமானங்கள் பற்றி பேசினார்.

முன்னதாக பேசிய கல்லூரியின் முதல்வர் முனைவர் த சரவணன் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றக் கட்டிடப் பொறியியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

See Also

இந்த மாநாட்டில் பல நிறுவனங்களை சார்ந்த 34 வல்லுநர்கள் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமீபத்திய போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி கூறினர். குறிப்பிடத்தக்க வகையில் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸின் தலைவர் முனைவர் ஏ. சுதாகர், கோயம்புத்தூர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜே. சகாயராஜ், கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷனின் தலைவர் திரு. ஆர். ராமகிருஷ்ணன், செயலாளர் திரு. சேகர், ஈரோடு மாவட்ட சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் தலைவர் திரு. எம். குப்புசாமி, மற்றும் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் திரு. சி.லக்ஷ்மணன் ஆகியோர் பங்கேற்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
1
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top