Now Reading
கேபிஆர் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப-கலாச்சார விழாவான ஃபியஸ்ட்டா ’25 மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது

கேபிஆர் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப-கலாச்சார விழாவான ஃபியஸ்ட்டா ’25 மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சர்வதேச தொழில்நுட்ப-கலாச்சார விழாவான ஃபியஸ்ட்டா ’25 வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது இதில் தொழில்நுட்பக் பிரிவு போட்டியில் 100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப போட்டிகள் , 20கும் மேற்பட்ட பயிற்சி பட்டறைகள் , பேராசிரியர்களுக்கான ஹேக்கத்தான் உட்பட பல்வேறு போட்டிகளும் . கலாச்சார நிகழ்வில் 15க்கும் மேற்பட்ட திரை மற்றும் இசை பிரபலங்கள் கலந்துகொள்ளும் கலை, கலாச்சார, வேடிக்கை நிகழ்வுகளும் நடைபெற உள்ளது .

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆயுதக் கண்காட்சி வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. மதுக்கரையில் உள்ள 35வது பீல்ட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்று பல்வேறு ஆயுத அமைப்புகள், பீரங்கிகள், சிறிய ஆயுதங்கள், கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைக் காட்சிப்படுத்தி விளக்கவுள்ளனர். இந்த கண்காட்சி இந்திய இராணுவத்திலுள்ள நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை நேரடியாக காண்பதற்கும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி அறியவும் ஓர் வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு இராணுவ அதிகாரிகள் வழிகாட்டவுள்ளனர். கல்லூரி மாணவர்களுக்கான இந்த கண்காட்சி இந்திய இராணுவத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கும்.’

See Also
dr rex

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top