Now Reading
கேலோ இந்தியா – தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே பி ஆர் பொறியியல் கல்லூரியில்

கேலோ இந்தியா – தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே பி ஆர் பொறியியல் கல்லூரியில்

khelo india

தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு போட்டிகள் கோவை கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது.

மத்திய அரசின் விளையாட்டு துறையின் முன்னெடுப்பான கேலோ இந்தியா திட்டம் விளையாட்டு துறையில் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளை தேசிய அளவில் வெளிப்படுத்தும் வாய்ப்பாக நடத்தப்படும் போட்டிகளின் ஒரு பகுதியாக பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த  வுஷு போட்டியானது ஓவ்வொரு ஆண்டும்,  மண்டல அளவிலும் இறுதிப்போட்டிகள் தேசிய அளவிலும்   நடைபெற்று வருகின்றன. வடக்கு மண்டல போட்டி உத்ரகாண்டிலும், கிழக்கு மண்டல போட்டி அஸ்ஸாமிலும், மேற்கு மண்டல போட்டி கோவா விலும் மற்றும் தெற்கு மண்டல போட்டி தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது.அதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான தென் மண்டல அளவிலான பெண்கள் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. ஜனவரி 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை “ஆஸ்மிதா” அமைப்புடன் தமிழ்நாடு வுஷு சொசியேஷன் மற்றும் கே பி ஆர் பொறியியல் கல்லூரி ஒருங்கிணைந்து நடத்துகிறது.இதில் தென் மாநிலங்களிலிருந்து சுமார் 600 வீராங்கனைகள் வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர்.

See Also
Tanishq

இது பற்றி செய்தியாளர்களிடையே  பேசிய வுஷு அமைப்பின் தேசிய தலைவர்  ஜித்தேந்திரா சிங் பஜ்வா இப்போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என மூன்று பிரிவுகளில்  நடத்தப்படும் என்றும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் தேசிய அளவில் நடைபெறும் கேலோ இந்தியா பெண்கள் வுஷு போட்டியில் பங்கேற்பார்கள்  என்றும் இப் போட்டிகளுக்கான மொத்த  பரிசு தொகை 60 லட்ச ரூபாய் என்றும் தெரிவித்தார். மேலும் மத்திய மற்றும் மாநில  அரசுகள் இந்த வுஷு  விளையாட்டையும், வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கறது என்றும் . சமீபத்தில் சர்வதேச அளவில் வுஷு போட்டியில்  வெற்றி பெற்ற ரோஷபினா  தேவி (Roshbina Devi) அவர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா வழங்கி கௌரவித்ததை குறிப்பிட்டார்  இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கே பி ஆர்  பொறியியல்  கல்லூரியின் முதல்வர் டாக்டர் ராமசாமி , மற்றும் தேசிய மற்றும் மணிலா நிர்வாகிகள் உடன் இருந்தனர்..

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top