Now Reading
கே பி ஆர் பொறியியல் கல்லூரி மாணவருக்கு தேசிய மாணவர் படையின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்.

கே பி ஆர் பொறியியல் கல்லூரி மாணவருக்கு தேசிய மாணவர் படையின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்.

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தேசிய மாணவர் படை மாணவர் பிரகதீஸ், ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற என்சிசி குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ப்ரோன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அவர் 6 TN
மெடிக்கல் கம்பெனி என்சிசி பிரிவிலிருந்து கோயம்புத்தூர் குழுவிற்காக போட்டியிட்டார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் அந்தமான் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குனர் கமோடர் அதுல் குமார் ரஸ்தோகியிடம் இருந்து மாணவர் பதக்கத்தைப் பெற்றார்.

பின்னர் பேசிய பிரகதீஸ் 6 TN மெடிக்கல் கம்பெனி என்சிசியின் காமாண்டிங் அதிகாரி மேஜர் அசோக் குமார் மற்றும் கேபிஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் த சரவணன் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.”

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top