Now Reading
கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி: 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன

கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணி: 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன

கே பி ஆர்

கே பி ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பருவநிலை மாற்றம் பற்றி பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மரக்கன்றுகளோடு 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வுப் பேரணி சென்றனர். காடு வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்தப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியைக் கல்லூரியின் மாணவர் விவகாரங்கள் துறையினர் மற்றும் நாட்டு நலப்பணி திட்டக் குழுவினர் ஆகியோர் இணைந்து நடத்தினர். கல்லூரி வளாகத்தைச் சுற்றி சுமார் 2 கி.மீ. தூரம் பேரணி சென்று இறுதியில் 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

பங்கேற்ற அனைவரும், மரம் வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தல், பூமி வெப்பமயமாவதைத் தடுத்தல் உள்ளிட்டக் கருத்துகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top