Now Reading
கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் “கார்கில் விஜய் திவாஸ்” கொண்டாடப்பட்டது

கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் “கார்கில் விஜய் திவாஸ்” கொண்டாடப்பட்டது

kargil

கே பி ஆர் பொறியியல் கல்லூரியில்  கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் “கார்கில் விஜய் திவாஸ்”  சிறப்பாக கொண்டாடப்பட்டது . அதனையொட்டி கார்கில் போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

கே பி ஆர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை பிரிவுகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கார்கில் நடவடிக்கைகளில் பங்கேற்ற மூன்று வீரர்கள் – சுபேதார் மேஜர் நந்த் கிஷோர் திவாரி, சுபேதார் மேஜர் பல்பீர் சிங் மற்றும் சுபேதார் பாரத் சிங்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது போர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் அவை மாணவர்களுக்கு தைரியம், தியாகம்,மற்றும் தேச பக்தியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

இந்த நிகழ்வில்  கல்லூரியில் உள்ள 4 தேசிய மாணவர் படை பிரிவுகளான 2 TN விமானப்படை, 2 TN கடற்படை, 5 TN பெண்கள் பட்டாலியன் மற்றும் 6 TN மருத்துவ பிரிவு படை ஆகிய வற்றின் மாணவர்கள் மற்றும் அதன் பொறுப்பு அதிகாரி ஆசிரியர்கள், கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top