Now Reading
கே பி ஆர் மில் பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவு மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை

கே பி ஆர் மில் பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவு மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை

KPR
கே பி ஆர் மில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்காக அவர்கள் பணிபுரிந்து கொண்டே உயர் கல்வியைத் தொடரும் வகையில் கேபிஆர் மில் பணியாளர்கள் கல்விப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்துப் பெண் பணியாளர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் கேபிஆர் குழுமங்களின் தலைவர் டாக்டர் கே பி ராமசாமி அவர்கள் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இது பற்றி  கே பி ஆர் பெண் பணியாளர்கள் கல்விப் பிரிவு முதல்வர் சரவண பாண்டி அவர்கள் கூறும் பொழுது, எங்களது கே பி ஆர் குழும நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களில் உயர் கல்வி தொடர விருப்பமுள்ள அனைவருக்கும் தங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்துப் படிப்பதற்கு ஆசிரியர்களை நியமனம் செய்து அத்துடன் தேவையான அனைத்து வசதிகளையும்  கே பி ஆர் குழுமம் செய்து தருகின்றது. இதில் பெண் பணியாளர்கள் பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்ட படிப்புகள் மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய 22 மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சியை கொடுத்துள்ளனர்.
இதில் பூமிகா எனும் மாணவி 545 மதிப்பெண்ணும் நீலாதேவி எனும் மாணவி 507 மதிப்பெண்ணும் பெற்று மில்லில் பணிபுரியும் மாணவிகளில் முதல் இரு இடத்தைப் பெற்றுள்ளனர்.  அவ்விரு மாணவிகளுக்கும் கே பி ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இலவசமாக கல்வி பயில்வதற்கான வசதியை நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கே பி ராமசாமி அவர்கள், இந்த மாணவிகள் இலவச கல்வியை தொடர்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.  இவ்விரு மாணவிகளுக்கு கே பி ஆர் மில் நிறுவனங்களின் செயல் இயக்குனர் திரு அருண்குமார் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top