Now Reading
கோயம்புத்தூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எதிர்கால வளர்ச்சிக்கு மேம்பட்ட மூலப்பொருட்களின் பயன்பட்டு உத்தி – 2024”

கோயம்புத்தூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எதிர்கால வளர்ச்சிக்கு மேம்பட்ட மூலப்பொருட்களின் பயன்பட்டு உத்தி – 2024”

KPR

“கோயம்புத்தூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எதிர்கால வளர்ச்சிக்கு மேம்பட்ட மூலப்பொருட்களின் பயன்பட்டு உத்தி – 2024”(Advanced Materials for Strategic Application and Sustainable Future – AMSAS – 2024) என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் இத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். சிறப்புமிக்க பேச்சாளர்கள் பொருள் அறிவியல், தற்காப்பு உலோகவியல், வேதியியல் பொருட்கள், உயிரி பொறியியல் மற்றும் மின்வேதியியல் ஆராய்ச்சி ஆகியவற்றை ஆராயும் விதமான கருத்துக்களை பரிமாறினர்.

இந்த மாநாடு அறிவுப் பரிமாற்றத்தின் மையமாக மட்டுமல்லாமல், நெட்வொர்க்கிங் மற்றும் இத்துறையில் வல்லுநர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பாகவும் இருந்தது. மாநாடு முழுவதும், கல்வித்துறை, தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தொடர்பு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருந்தது. பங்குபெற்றவர்கள் , பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிவுச் செல்வம் மற்றும் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகளால் ஈர்க்கப்பட்டனர், மூலப்பொருட்களின் பயன்பாடுகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மேம்படுத்தப்பட்ட மூலப் பொருட்களை பயன்படுத்துவது, கூட்டு அர்ப்பணிப்புடன், முன்னேற்றம் மற்றும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் புதுமை மற்றும் கூட்டு முயற்சியின் சக்திக்கு இந்த மாநாடு ஒரு சான்றாக உள்ளது.”

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top