Now Reading
கோயம்புத்தூர் மணி உயர்நிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு மாணவர்களின் பொன்விழா

கோயம்புத்தூர் மணி உயர்நிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு மாணவர்களின் பொன்விழா

11 8 2024 ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மணி உயர்நிலைப் பள்ளியில் 1974 ஆம் ஆண்டு, தம் பள்ளி இறுதி ஆண்டு(SSLC) முடித்த மாணவர்களின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 8:30 மணி அளவில் பள்ளிக்கு வந்த மாணவர்களை தற்போதைய சாரண மாணவர்கள் சீருடையில் நின்று வரவேற்றனர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பொன்விழா ஆண்டு மாணவ மாணவியர் அணிவகுப்பை நடத்த, பள்ளி மைதானத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சத்திய நாராயணா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி வரவேற்றார். அதன் பிறகு ஒவ்வொரு செக்க்ஷன் மாணவ, மாணவியர் அந்தந்த வகுப்பிற்கு சென்று, அக்கால பள்ளி நாட்களை பற்றிய மரு உருவாக்கம் செய்து,நினைவுகளை பகிர்ந்து, மகிழ்ந்து கலந்துரையாடினர்.

தொடர்ந்து மாணவ மாணவியர் தம் வகுப்பினர் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அடுத்த நிகழ்வாக நானி கலை அரங்கில் பொன்விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு, பின்னர் பொன்விழா கமிட்டி நிர்வாகி திரு நந்தகோபால் அவர்கள், வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து 1974 ஆம் ஆண்டில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் திரு சோமசுந்தரம், திருமதி நாமகிரி ஆகியோர் மேடைக்கு அழைத்து வரப்பட்டு நினைவு பரிசு அளிக்கப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டனர். தலைமை ஆசிரியரின் சிறப்புரைக்குப் பிறகு,பள்ளி சார்பில் 1974 ஆம் ஆண்டில் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடம் பெற்ற மாணவருக்கும், பள்ளியின் முதல் மாணவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

See Also
dr rex

பின்பு சக மாணவர் கிருஷ்ணானந்த் தயாரித்த, அன்றைய இன்றைய பள்ளி தோற்றம். ஆசிரியர் புகைப்படங்கள்..சக மாணவர்கள் அன்றைய சாதனை புகைப்படங்கள்.ஆசிரியர் வாழ்துரைகள் அனைத்தும் காணொளி காட்சியாக ஒளிபரப்ப பட்டது. இறுதியில் மாணவர் ஜோசப் உக்குரு நன்றி நவில, பொன்விழா இனிதே நிறைவுற்றது.

What's Your Reaction?
Excited
1
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top