Now Reading
கோவைஅருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சம்ஹிதா அகாடமிபள்ளியில் விளையாட்டு விழா

கோவைஅருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள சம்ஹிதா அகாடமிபள்ளியில் விளையாட்டு விழா

samhita sports day

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள, சம்ஹிதா அகாடமியின் ஏழாம் ஆண்டு விளையாட்டு தின விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

விழாவில்பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன்தேசிய கொடியை ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

இதில் வாயு, அக்னி, பிருத்வி மற்றும் ஜல் என நான்கு அணிகளாக பள்ளி மாணவ,மாணவியர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். முன்னதாக பள்ளி மாணவ,மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் ஸ்போரட்ஸ் கேப்டன் மாணவர் ஞானராஜ் வரவேற்று பேசினார்.

அதைதொடர்ந்து,தடகளபோட்டிகள்,சிலம்பம்,கராத்தே,பிரமிடு,மாஸ்டர் டிரில் மற்றும் 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டு தின நிகழ்ச்சிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதா மற்றும் காந்தி நாதன் ஒருங்கிணைத்தனர். இதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.

விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றஅணிகளுக்கு பரிசுகள்மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

See Also
coimbatore marathon

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி முதல்வர் புஷ்பஜாபேசும் போது,
” மாணவர்களுக்கு விளையாட்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று எங்களது பள்ளியில் கல்வியோடு மாணவ,மாணவிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறதுமேலும் சிறந்த கல்வியுடன் விளையாட்டு ஆர்வம் இருந்தால் மாணவர்களின் எதர்காலத்தை சிறந்த முறையில் உருவாக்க முடியும் என கூறினார்.

விழாவில். மாணவ,மாணவிகள் பெற்றோர்கள்,பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top