Now Reading
கோவையில் குளோபல் ஆர்ட் சார்பில் மாநில அளவிலான ஓவிய போட்டி

கோவையில் குளோபல் ஆர்ட் சார்பில் மாநில அளவிலான ஓவிய போட்டி

கோவையில் பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்கும் விதமாக குளோபல் ஆர்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஓவிய போட்டிகள் நடைபெற்று வருகிறது
அதைத்தொடர்ந்து ஒண்பதாவது ஆண்டாக,பீளமேடு பகுதியில் உள்ள மணி மகால் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக பிரிட்ஜ் வுட்ஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் வித்யா பிரபா கலந்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்
குளோபல் ஆர்ட் தமிழ்நாடு தலைமை நிர்வாகி மங்கள் சாமி, மேற்கு மண்டல தலைமை நிர்வாகி சபரீஷ்,மேலாளர் நம்ரதா,ஆகியோர்வரவேற்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்

இந்த ஓவியத் திறன் போட்டியில் கோவை, திருப்பூர் ஈரோடு சேலம் திருச்சி, நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பள்ளி குழந்தைகள் சுமார் 450 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஐந்து வயது முதல் பதனைந்து வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டஇந்த நிகழ்வில் “தண்ணீருக்கு கீழே நகரம் “எனும் ஓவிய தலைப்பு வழங்கப்பட்டது..

See Also
monetary policy

இதில் தங்களது படைப்பாற்றல் திறனை வண்ண ஓவியங்களாக தீட்டிஅனைவரையும் வியக்க வைத்தனர்.

இறுதியாக சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு
குழந்தைகள். மாணவ, மாணவிகளுக்கும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top