Now Reading
கோவையில் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பொது விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி: யூனியன் பேங்க் ஆப் இந்தியா நடத்தியது

கோவையில் 1000 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பொது விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி: யூனியன் பேங்க் ஆப் இந்தியா நடத்தியது

யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை நவஇந்தியா அருகில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாரதியார் அரங்கில் இன்று தேசிய அளவிலான பொது விழிப்புணர்வு வினாடி&வினா போட்டி நடைபெற்றது.

`யூ-ஜீனியஸ் 2.0` என்ற தலைப்பில் நடந்த போட்டியில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை. யூனியன் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன், துணைப் பொதுமேலாளர் எஸ்.சுப்பிரமணியன், கோவை பிராந்திய துணைப் பொது மேலாளர் தாசரி ஆஞ்சநேயுலு, திருப்பூர் பிராந்திய உதவிப் பொது மேலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலையில், முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டி.ஆர்.கே.சரசுவதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த போட்டியில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 600 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்து 2 பேர் வீதம் பங்கேற்றுள்ளனர். மாணவ, மாணவிகள் தங்கள் திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
கோவையில் நடந்த வினாடி&வினா போட்டியில் சம்ஸ்ஹாரா அகாடமி மாணவர்கள் நிர்வான் ராமகிருஷ்ணன், ஹரீஸ் ஆகியோர் வெற்றிவாகை சூடினர்.

அவர்களுக்கு பரிசுக் கோப்பையை யூனியன் பேங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல பொது மேலாளர் விஸ்வேஸ்வரன் வழங்கினார். இதேபோன்ற வினாடிவினா போட்டிகள் அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை உள்ளிட்ட 32 நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன.
பொதுஅறிவு, இந்திய அறிவு, உலகப் பண்பாடு, விளையாட்டு, இலக்கியம், துறை மற்றும் ஆளுமை நபர்கள், பொது விழிப்புணர்வு, வங்கியியல், நிதி போன்ற தலைப்புகளைக் கொண்ட இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மும்பையில் நடைபெறும் இறுதிச்சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

See Also

பட விளக்கம்:
============
யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான பொது விழிப்புணர்வு வினாடி வினா போட்டி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பாரதியார் அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சம்ஸ்ஹாரா அகாடமி மாணவர்கள் நிர்வான் ராமகிருஷ்ணன், ஹரீஸ் ஆகியோருக்கு பரிசுக் கோப்பையை வங்கியின் சென்னை மண்டல பொதுமேலாளர் விஸ்வேஸ்வரன் வழங்கினார். அருகில் துணை பொது மேலாளர் எஸ்.சுப்பிரமணியன், கோவை பிராந்திய துணைப் பொது மேலாளர் தாசரி ஆஞ்சநேயுலு, திருப்பூர் பிராந்திய உதவி பொது மேலாளர் தனசேகரன் உட்பட பலர் உள்ளனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top