Now Reading
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம்

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச பயிலரங்கம்

kongunadu

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு “சி.ஆர்.ஐ.எஸ்.பி.ஆர். மற்றும் சி.ஏ.எஸ். 9 தொழில்நுட்பம் 21-ம் நூற்றாண்டின் ஆரோக்கியம் மற்றும் சுற்று சூழல் நிலைத்தன்மையின் ஒரு பரிபானம் ” குறித்த 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பயிலரங்கம் தொடங்கியது.

விழாவுக்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சி. ஏ.வாசுகி தலைமை தாங்கினார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் பேராசிரியர் விஷ்ணுபிரியா வரவேற்று பேசினார்.

வருகிற 11-ந் தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த பயிலரங்கத்தை லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்கல்பனா சுரேந்தர்நாத் தொடங்கி வைத்தார்

விழாவில் அவர் பேசும்போது, இந்த கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி அவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு முற்போக்கு சிந்தனையோடு பயோ டெக்னாலஜி பாடப்பிரிவை இந்த கல்லூரியில் தொடங்கி வைத்தார்.நான் இந்த உயர்ந்த நிலைக்கு வர காரணம் இங்குஇந்தப் பாடல் பிரிவை எடுத்து படித்ததன்பலனாக இந்த உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன்அதற்காக நிறுவனர் டாக்டர் ஆறுச்சாமி அவர்களை பாராட்ட வேண்டும் அதேபோன்று இங்கு பயிலும்மாணவ மாணவிகள்இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் “என்று கூறினார்

See Also
psg imsr

முடிவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி. சங்கீதா நன்றி கூறினார்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top