Now Reading
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள எடமனச்சேரி முதுகெலும்பு ஆயுர்வேத மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மனிதனின் வாழ்க்கையில் நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்காக ஆயுர்வேதம் நமக்களித்த ஓர் அரிய வாய்ப்பு தான். ஆயுர்வேத என்பது நோய்களை குணப்படுத்துவது மட்டுமின்றி அவற்றை முன்கூட்டியே தடுத்து நிறைவான ஆரோக்கியத்துடன் விளங்க செய்வது இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். கேரள பாரம்பரிய மிக்க இந்த சிகிச்சை முறையானது, வெளிப்புற சிகிச்சையின் மூலம் அதிக பலனை அளிப்பதால் உலக அளவில் அங்கீகாரமிக்க சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது.

குறிப்பாக தற்போது உள்ள கால கட்டத்தில் , மனிதர்களுக்கு முதுகு வலி, கால் வலி,கை வலி,கழுத்து வலி, நரம்பு, தோல் பிரச்சனை என்பது அதிகமாகவே உள்ளது.இத்தகைய பிரச்சனைக்கு கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள எடமனச்சேரி முதுகெலும்பு ஆயுர்வேத மருத்துவமனையில் நிரந்தர தீர்வுகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களது உடம்பில் உள்ள பிரச்சனைகளை பரிசோதனை மேற்கொள்ள எடமனச்சேரி முதுகெலும்பு ஆயுர்வேத மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

See Also

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை சோதனை மற்றும் எலும்பு கனிம அடர்த்தி சோதனை இலவசமாக பார்க்கப்பட்டது.

இந்த முகாமில் மருத்துவமனையின்  நிறுவுனர் ஜார்ஜ், முதுகெலும்பு நிபுணர் டாக்டர் டோனா ஜார்ஜ், நரம்பியல் நிபுணர் டாக்டர் சாண்ட்ரா ம் ஜார்ஜ், கலந்து கொண்டு பொதுமக்களுக்கு எலும்பு,நரம்பியல், தோல், முதுகெலும்பில் வரக்கூடிய நோய்களுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top