Now Reading
கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் கேட்வே 24

கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் கேட்வே 24

psg cas gateway

கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் கேட்வே 24 எனும் தலைப்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் டி. பிருந்தா தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை இணைப் பேராசிரியை டாக்டர் டி.ரேவதி வரவேற்புரையாற்றினார். கணினி அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் பி.ராஜ்தீபா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக ஸ்கை ஹை அகாடமியின் நிறுவனர் டாக்டர். சி கவுதம் லோகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

துறையின் துணைப் பேராசிரியர் தியாகராஜன், கேட்வே 24 சிடியை வெளியிட்டார். மேலும்,எலிவேஷன் 24 இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக, ஸ்டார் ஆஃப் தி கேட்வே, பன் இன் ரன், மைண்ட் ஹேக், பன் பெஸ்ட், டெக் பஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 33 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

See Also
kpriet

இறுதியில் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.எம்.சரவணகுமார் நன்றியுரை கூறினார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top