Now Reading
தென்னிந்திய திருச்சபைகளின் சோஷியல் கன்செர்ன் பிரிவு சார்பாக கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தென்னிந்திய திருச்சபைகளின் சோஷியல் கன்செர்ன் பிரிவு சார்பாக கோவையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நாடு முழுவதும் நடைபெறும் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு வன்முறைகளுக்கு எதிராக தென்னிந்திய திருச்சபைகள் சார்பாக ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் கருப்பு வியாழனாக அனுசரித்து வருகின்றனர்.இதில் வியாழன் தோறும் தென்னிந்திய திருச்சபையின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களது எதிர்ப்புகளை பல்வேறு விதமாக பதிவு செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக தென்னிந்திய திருச்சபையின் சோசியல் கன்சர்ன் எனும் சமூக செயல்பாட்டு பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் தலைமையில் நடைபெற்ற இதில்,செயலாளர் பிரின்ஸ் கால்வின், உப தலைவர் டேவிட் பர்ணபாஸ்,பொருளாளர் அமிர்தம்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்,நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த ஆண்கள்,பெண்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.இதில் பெண்களின் தைரியமே பெண்களுக்கு பாதுகாப்பு,பெண்களுக்கு சம உரிமை, பெண்ணுரிமை காப்போம்,பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோசங்கள் எழுப்பினர். இதில் பேராயரம்மா ஆனி ரவீந்தர், தென்னிந்திய திருச்சபைகளின் கோவை வட்டக தலைவர் ராஜா,சோஷியல் கன்செர்ன் பிரிவின் தலைவர் மனோ,உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை திரு மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

See Also
Horeca

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top