Now Reading
நேஷனல் மாடல் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பங்கேற்பு

நேஷனல் மாடல் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பங்கேற்பு

national model

கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஏ. சேகர் கலந்துகொண்டு மாணவ, மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சாலை விபத்துகளில் உயிரிழப்பு சம்பவம் அதிகம் நடைபெறுவதால், சாலை விதிகளை முறையாக கடைபிடித்து மாணவ, மாணவிகள் சாலையில் செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை பொறுத்து வெளியில் செல்லும் போது, முன்னதாகவே திட்டமிட்டு செல்ல பெற்றோர்களை அறிவுறுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து சாலை விபத்தினை தடுப்போம். சாலை விதிகளை மதிப்போம் என மாணவ, மாணவிகள், பள்ளி வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் நேஷனல் மாடல் பள்ளி நிர்வாக அதிகாரிகள் கண்ணன், பிரியா, பள்ளி முதல்வர்கள் கீதா, பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படம்: கோவை பீளமேட்டில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஏ. சேகர் கலந்துகொண்டு மாணவ, மாணவர்களிடையே பேசினார். அப்போது சாலை விதிகளை மதிப்போம் என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
2
In Love
2
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top