Now Reading
பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில் பணியாளர்கள் தின விழா

பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில் பணியாளர்கள் தின விழா

PSG Staff day

கோவை பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில், பணியாளர்கள் தின விழா பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் உள்ள கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் பிறந்த நாள் தினம் பணியாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மதுரை தியாகராஜர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஜி.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு பேசினார். தொடந்து அவர் பி.எஸ்.ஜி நிறுவனங்களின் 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த முதல்வர் கள், நிர்வாகிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 55 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

See Also
Tanishq

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செங்குட்டுவன், பி.எஸ்.ஜி கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி பப்ளிக் பள்ளி செயலாளர் நந்தகோபாலன், பி.எஸ்.ஜி மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பானுமதி, கல்லூரி செயலாளர் டி. கண்ணைய்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top