Now Reading
பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அழகியல் துறை நிகழ்ச்சி

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அழகியல் துறை நிகழ்ச்சி

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அழகியல் மற்றும் ஆரோக்கிய துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே கூரையின் கீழ் அழகியல் துறை சார்ந்த பல்வேறு தொழில் நுட்பங்கள் காட்சி படுத்தப்பட்டன.

கோவை அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அழகியல் துறை தொடர்பான கல்வி முறையை அறிமுகபடுத்தியதில் இந்தியாவிலேயே முதல் கல்லூரி என்ற பெருமையை பெற்ற கல்லூரியாக உள்ளது..

கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கி தற்போது அழகு மற்றும் ஆரோக்கிய துறை எனும் (Beauty and Wellness) டிபார்ட்மெண்ட் ஆக செயல்பட்டு வரும் துறை சார் மாணவிகளின் செய்முறை திறன்களை வளர்க்கும் விதமாக இரண்டு நாட்கள் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், செயல்விளக்கம், பிரபல நிறுவனங்களின் அழகு சாதனங்கள் விற்பனை, அழகு துறை மாணவிகளின் மணப்பெண் அலங்காரப் போட்டி என இரண்டு நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.. ப்ரோ ஜி ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் இணைந்து நடத்திய இதில்,நேரடி அழகுத்துறைப் பயிற்சிகள், பெரு நிறுவன அழகு சாதனப் பொருட்களின் கண்காட்சி நடைபெற்றன.

இவ்விழாவில் அழகுத்துறை நிபுணர்கள், பிரபல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள், தொழில்துறை வல்லுநர்கள், அழகு மற்றும் ஆரோக்கியத்துறையில் பயிலும் மாணவிகள் ஆகியோரை ஒன்றிணைக்கும் விழாவாக நடைபெற்றது.

இதில், பாலிவுட் புகழ் அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி, மாதிரி தீக்க்ஷித், கரிஷ்மா கபூர், ரம்யா கிருஷ்ணன், கங்கணா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்களின் சிகை அலங்கார நிபுணர்கள் ஒப்பனை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த அழகுத்துறை திருவிழாவில் பிரபல பாலிவுட் பட உலக ஒப்பனைக் கலைஞர் ராஜு ஓர்பே, சினிமா பட ஒப்பனை நேரடி செயல் விளக்கம் அளித்தார். சர்வதேச சிகை அலங்கார நிபுணர், சமீர் சால்வா சிகை அலங்காரம் பற்றிய செயல் விளக்கம் அளித்தார்.

தோல் மற்றும் முடிக்கான சிகிச்சை அளிக்கும் அழகு சாதனவியல் மருத்துவர் ஷனாஸ் கான் தோல் சிகிச்சை, மங்கு சிகிச்சை பற்றி நேரடி செயல் விளக்கம் வழங்கினார்.

See Also

கிளாம் ஸ்பாட் அகாடமி நிறுவனர் ஸ்வாதி சிறப்பு விளைவுகள் ஒப்பனை பற்றிய செயல் விளக்கம் அளித்தார்.

பாலிவுட் புகழ் சிகை அலங்கார நிபுணர் டோனி அலோசியஸ் சிகை அலங்காரங்கள் பற்றிய நவீன முறைகளை நிகழ்த்திக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அழகு மற்றும் ஆரோக்கியத்துறையின் துறை தலைவர்கள், பேராசிரியைகள்,கல்லூரி சார் ஊழியர்கள் என அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top