Now Reading
பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் வானியல் மன்றம் துவக்கம்: இஸ்ரோ முன்னாள் வி்ஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் வானியல் மன்றம் துவக்கம்: இஸ்ரோ முன்னாள் வி்ஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

psg Mayilsamy

கோவை, அக். 6 :- கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் வானியல் மன்ற துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில் கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் தி. கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சந்திராயன் 1 மற்றும் 2 முன்னாள் திட்ட இயக்குநரும், இஸ்ரோ முன்னாள் வி்ஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை பேசியது: சந்திராயன் 3 விண்கலம் நிலவில் உறங்கிக் கொண்டு இருக்கவில்லை. அது ஒரு மரத்தின் விதை போன்றது. விரைவில் அந்த விதை முளைத்து மரமாக மாறும்.

நிலவில் நீர் இருப்பதை இந்தியாதான் முதலில் அறிவியல் பூர்வமாக சந்திராயன் 1 மூலமாக உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, ஆக்ஸிசன் மற்றும் ஹைரஜன் இருப்பதை அடுத்து அடுத்து சென்ற சந்திராயன் விண்கலங்கள் உறுதி செய்து இருக்கின்றன. சமீபத்தில் நிலாவில் குடியேறும் திட்டம் குறித்து சீனா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழலில் நிலவு குறித்த ஆய்வை நாம் விரைவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வருங்காத்தில் நிலவுக்கு செல்லும் அனைத்து பயணங்களும் நிலவுக்கான இந்தியாவின் உரிமை பயணமாக இருக்க வேண்டும்.

விரைவில் இந்தியாவின் சார்பில் நிலவில் குடியிருப்புகள் உருவாக்கப்படும். இந்தக் குடியிருப்புகள், நிலவில் இருக்கும் கனிம வளங்களை பயன்படுத்தியே உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்கே இந்தியாவின் சார்பில் சர்வதேச மையமும் நிலவில் அமைக்கப்பட வேண்டும். நிலவில் இருக்கும் கனிம வளங்களை பயன்படுத்தினால், உலகின் வெப்பமயாவதைத் தடுக்க முடியும்.

See Also

சந்திராயன் விண்கலங்கள் விண்ணில் பாய்ந்த பிறகு, வானவியல் குறித்த மாணவர்களின் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அனைவராலும் வானவியல் ஆய்வில் ஈடுபட முடியும். மாணவர்கள், புதிய விண்கற்களையோ, புதிய கோள்களையோ கண்டறியும்பட்சத்தில், அவர்களின் பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்படும். தங்களின் பெயர்கள் என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டும் என இளைஞர்கள் விரும்பினால், அவர்கள் வானவியல் ஆய்வில் ஈடுபட வேண்டும் என்றார்.

முன்னதாக, பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள், சந்திராயன் 3 நிலவில் தரை இயங்கிய நிகழ்வை சத்ருமாக ஸ்டுமிலேட்டர்கள் கொண்டு செய்து காட்டினர்.

What's Your Reaction?
Excited
0
Happy
1
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top