Now Reading
பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட அதிநவீன டயாலிசிஸ் மைய திறப்புவிழா

பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் விரிவாக்கம் செய்யப்பட அதிநவீன டயாலிசிஸ் மைய திறப்புவிழா

கோவை பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிறுநீரக நல சிகிச்சைத்துறை நோயாளிகளுக்காக வேண்டி 15 படுக்கைகளுடன், நவீனமயமாக்கப்பட்ட டயாலிசிஸ் மையம் இன்று (19.02.2024) துவங்கப்பட்டது. பி எஸ் ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் திரு L கோபாலகிருஷ்ணன் மற்றும் சேர்மன் திரு G.R. கார்த்திகேயன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. உடன் பி எஸ் ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் Dr. J.S.புவனேஸ்வரன் மற்றும் சிறுநீரக நல சிகிச்சைத்துறை தலைமை மருத்துவர் G. வேணு மற்றும் இணை மருத்துவர்கள் G. வசந்த், S.அறிவழகன் பங்கேற்றனர்.

இதுகுறித்து நிர்வாக அறங்காவலர் அவர்கள் கூறியதாவது,

1990 ஆம் ஆண்டு பி எஸ் ஜி அறநிலையத்தின் சேர்மன் திரு.G.R.கார்த்திகேயன் அவர்கள், அவரது தந்தை திரு. இராமசாமி நாயுடு நினைவாக 2 டயாலிசிஸ் இயந்திரத்தை பி எஸ் ஜி மருத்துவமனைக்கு தானமாக அளித்தார். அன்று துவங்கப்பட்ட பி எஸ் ஜி டயாலிசிஸ் மையம் பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சுமார் 30 இயந்திரங்களுடன் செயல்பட்டுவந்தது. இன்று மேலும் 15 அதிநவீன இயந்திரங்களுடன் மொத்தம் 45 இயந்திரங்களுடன் சேவையை வழங்கி வருகிறது. வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு இம்மையத்தில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. தீவிரசிகிச்சைப்பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு அங்கேயே வைத்து டயாலிசிஸ் செய்வதற்கான வசதியும் உள்ளது. ஏற்கனவே ஒருநாளைக்கு சுமார் 120 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுவருகிறது. இன்று துவங்கப்பட்ட அதிநவீன டயாலிசிஸ் மையம் மூலம் மேலும் சுமார் 75 நோயாளிகளுக்கு இந்த சேவையை வழங்கிட முடியும். இதன்மூலம் ஒருநாளைக்கு சுமார் 200 நோயாளிகள் வரை பி எஸ் ஜி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம்.

See Also
Alert fest

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top