Now Reading
பி எஸ் ஜி மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மிகவும் சிக்கலான ரோபோடிக் இருதய அறுவை சிகிச்சை

பி எஸ் ஜி மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மிகவும் சிக்கலான ரோபோடிக் இருதய அறுவை சிகிச்சை

psg hospitals

கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில், பிறப்பிலிருந்தே இருதயத்தில் பிரச்சனை உள்ள 15 வயது சிறுமிக்கு மிகவும் சிக்கலான இருதய அறுவை சிகிச்சை ரோபோடிக் முறையில் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல்முறையாக இதுபோன்ற சிக்கலான இருதய அறுவை சிகிச்சை ரோபோடிக் முறையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

See Also

இதுகுறித்து பி எஸ் ஜி மருத்துவமனையின் டாக்டர் அனந்த நாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பிறப்பிலிருந்தே இருதயத்தின் மேல் அறையில் ஓட்டையும், கீழ் அறையில் கசிவும் உள்ளது. இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே நேரத்தில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து பி எஸ் ஜி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். ரோபோட்டிக் மூலம் அறுவை சிகிச்சை செய்யும் பொழுது தழும்பு உருவாவதில்லை. வலியும் அதிகம் இருப்பதில்லை. ரத்த சேதமும் அதிகம் ஏற்படுவதில்லை என்றார். மேலும், நாலரை முதல் ஐந்தரை மணி நேரத்தில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் நான்கு முதல் ஐந்து நாட்களில் நோயாளி வீட்டிற்கு திரும்பினார். இந்தியாவிலேயே இது போன்ற சிக்கலான இருதய அறுவை சிகிச்சை ரோபாட்டிக் முறையில் வெற்றிகரமாக பி எஸ் ஜி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். பேட்டியின் போது மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் உடன் உள்ளார்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top