Now Reading
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு – ஆரோஹ் அமைப்புடன் புரூக்பீல்ட்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு முயற்சி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு – ஆரோஹ் அமைப்புடன் புரூக்பீல்ட்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு முயற்சி!

brookefields

கோவையில் உள்ள புரூக்பீல்ட்ஸ் வணிக வளாக நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.எனும் கார்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக நல பணி திட்டங்களை தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்..

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்கி வரும் ஆரோஹ் எனும் அமைப்பினருடன் இணைந்து புரூக்பீல்ட்ஸ் நிறுவனம் வழங்கி உள்ள ஆதரவு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு புரூக்பீல்ட்ஸ் வளாக அரங்கில் நடைபெற்றது..

இதில் ஆரோஹ் – கிவிங் ஹோப் அமைப்பின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிந்து என் நாயர் பேசுகையில்:

தற்போது, நாடு முழுவதும் 50 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூலமாக 3,500 குழந்தைகளுக்கு ஆரோஹ் அமைப்பு ஆதரவு வழங்கி வருவதாக கூறிய அவர். மருத்துவ உதவி இந்த அமைப்பின் மையப் பணி என தெரிவித்தார்.

எனவே உயிர் காப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள பெரும் நிதியுதவி தேவைபடும் நிலையில்,புரூக்பீல்ட்ஸ் வழங்கிய நிதி, முக்கிய மருத்துவ செலவுகளை ஈடுகட்டுவதில் மிக முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தார்.

குறிப்பாக இரத்தப் பரிசோதனை, ரசாயன சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட உதவியுள்ளது. இதன் மூலம், பல சிறுவர்கள் புதிய நம்பிக்கையுடன் புற்றுநோயை எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாகி உள்ளதாக நெகிழ்வுடன் கூறினார்.

See Also
CSI

தொடர்ந்து பேசிய, புரூக்பீல்ட்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ அஷ்வின் பாலசுப்ரமணியம், புரூக் பீல்ட்ஸ் எப்போதும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது.

ஆரோஹ் உடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முழுமையான பராமரிப்பை வழங்கும் என அவர் கூறினார்.

மேலும், புரூக்பீல்ட்ஸ் பிற சமூக நல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, அதிக குழந்தைகளுக்கு உதவுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top