Now Reading
பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “தமிழ் இலக்கியங்களில் சூழலியலும் காலநிலை மாற்றங்களும்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “தமிழ் இலக்கியங்களில் சூழலியலும் காலநிலை மாற்றங்களும்” என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

tamil

பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), தொல்காப்பியர் தமிழாய்வு மையம், இந்திய இலக்கிய ஆய்வுகளுக்கான பன்னாட்டு ஆய்விதழ் (ISSN : 2583 – 5572), தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்)  இலங்கை, தமிழ்மொழி கலைக்கழகம் (TALA) இலண்டன், வாகை தமிழ்ச்சங்கம் பெரம்பலூர், பூவுலகின் நண்பர்கள், சுற்றுச்சூழல் – அமைப்பு சென்னை ஆகிய பல்வேறு அமைப்புகளும் இணைந்து மார்ச் 20, 2024 (புதன்கிழமை)  அன்று பன்னாட்டுக் கருத்தரங்கம் “தமிழ் இலக்கியங்களில் சூழலியலும் காலநிலை மாற்றங்களும்” என்னும் தலைப்பில் சந்திரா கருத்தரங்கக் கூடத்தில் காலை 9.30 மணியளவில் தொடக்க விழா இயற்கை வாழ்த்துப் பாடலுடன் துவங்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் (சுயநிதிப்பிரிவு)   முனைவர் கோ.சுகன்யா அம்மா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர், சூழலியல் ஆர்வலர் திரு. மு.வெற்றிச்செல்வன் அவர்கள் “தமிழ் மெய்யியல் பார்வையில் காலநிலைப் பிறழ்வு” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவ்வுரையில் காலந்தோறும் காலநிலை எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதையும் அதை எவ்வாறு மனிதர்கள் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து சூழலியல் அறிஞரும், எழுத்தாளரும், இயற்கை ஆர்வலரும் கோவை சதாசிவம் அவர்கள் “பூமிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் நீரின் தேவை பற்றியும், அதனைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து கருத்தரங்க அமர்வு சக்தி அறக்கட்டளை, நிறுவனர் திருமதி மிருதுளா நடராஜன் மற்றும் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் இரா.ஜோதிமணி  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கட்டுரையாளர்கள் காலநிலை சார்ந்த கருத்துக்களை முன்வைத்தனர்.  நிகழ்வின் இறுதியாக தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) தொல்காப்பியர் தமிழாய்வு மையம்,சந்திரகாந்தம் தமிழ்மன்றம் இவ்விரு மன்றங்களின் நிறைவு விழா நடைபெற்றது. இம்மன்றங்களின் பொறுப்பாளர்களான முனைவர் ப.மணிமேகலை, முனைவர் இரா.மாலினி அவர்கள் ஆண்டறிக்கை   வழங்கினார்கள்.

See Also
mango mania

சந்திரகாந்தம் தமிழ்மன்றத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும், கட்டுரையாளர்களும்,  கருத்தரங்கப் பங்கேற்பாளர்களுக்கும் சிறப்புவிருந்தினர்கள்  சான்றிதழும் பரிசும் வழங்கினர். இதனுடன் இயற்கையை பாதுகாக்க கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு லெட்ஸ் தேங்க் பவுண்டேஷன் மூலம் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நிகழ்வின் நன்றியுரை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.மணிமேகலை வழங்கினார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top