Now Reading
பொறியாளர்களின்றி வளர்ச்சி இல்லை – கேபிஆர் பொறியாளர்கள் தின மாநாட்டில் சிறப்பு விருந்தினர் பேச்சு

பொறியாளர்களின்றி வளர்ச்சி இல்லை – கேபிஆர் பொறியாளர்கள் தின மாநாட்டில் சிறப்பு விருந்தினர் பேச்சு

KPR

கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரத ரத்னா சர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் 164வது பிறந்த நாளைப் போற்றும் வகையில் "இலக்கு 2024: பொறியியல் கண்டுபிடிப்புகள், நிலைத்தன்மை, மற்றும் தொழில் எல்லைகள்; என்ற கருப்பொருளுடன் பொறியாளர் தின மாநாடு நடைபெற்றது.

பொறியாளர்களின் உழைப்பு மற்றும் இன்றியமையாமையைக் காட்டும் சமர்ப்பண காணொளியுடன் கல்லூரி முதல்வர் முனைவர் த சரவணன் அவர்கள் தலைமையில் தொடங்கிய மாநாட்டில் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் திருமதி ராஜலட்சுமி சீனிவாசன், ஏபிபி குளோபல் இண்டஸ்ட்ரீஸ் சர்வீசஸ் லிமிடெடின் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் தலைவர் திரு பிரவின் குமார், பாரத் பெட்ரோலியத்திலிருந்து பிராந்திய மேலாளர் திரு பிரபாகர் மற்றும் ஆலை மேலாளர் திரு எஸ் கே மாணிக்கவாசகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

திருமதி ராஜலட்சுமி சீனிவாசன் பேசுகையில் பொறியாளர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் சுயமான நடைமுறைக் கற்றல் தேவை என்று குறிப்பிட்டார். மேலும் எத்தகைய வளர்ச்சிக்கும் அனைவரிடமிருந்தும் கற்றுக்கொள்ளும் திறந்த மனப்பான்மை அவசியம் என்று வலியுறுத்தினார்.

பொறியியலின் அடிப்படைக் கல்வியை முழுமையாகக் கற்றால் எவ்வித பிரச்சனைக்கும் பொறியியல் மூலம் தீர்வு காணலாம் என திரு பிரவின் குமார் அவர்கள் பேசினார். தொடர்ந்து பேசிய திரு எஸ் கே மாணிக்கவாசகம் பெட்ரோலிய தொழிற்சாலைகளின் தற்போதைய செயல்பாடு மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.

See Also

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் அதிகம் முதலீடு செய்து வருவதால் இனிவரும் காலங்களில் ஆற்றல் உற்பத்தியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிட்ட திரு பிரபாகர் அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தவேண்டும் என்றும் மாணவர்களுக்கு
அறிவுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய கல்லூரி முதல்வர் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போதுள்ள பொறியாளர்கள் அதிகம் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என பேசினார். மாநாட்டில் மாணவ மாணவிகள், பேராசியர்கள், மற்றும் தொழில் வல்லுநர்கள் பங்கேற்றனர். அதோடு கல்லூரியின் அனைத்து துறைகள் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவ  மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top