Now Reading
பொற்சபை அகாடமி ஆப் பர்பாமிங் ஆர்ட்ஸின் பத்தாவது ஆண்டு விழா

பொற்சபை அகாடமி ஆப் பர்பாமிங் ஆர்ட்ஸின் பத்தாவது ஆண்டு விழா

பொற்சபை அகாடமி ஆப் பர்பாமிங் ஆர்ட்ஸின் பத்தாவது ஆண்டு விழா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சித்ரா கலையரங்கத்தில் இனிதே நடைபெற்றது. விழாவினை முன்னிருந்து சிறப்பாக நடத்தினார் குரு ஸ்ரீமதி நந்தனி செல்வராஜ்.

இந்த விழாவிற்கு சாந்தி ஆசிரமத்தின் நிறுவனர் டாக்டர் கெஸ்வினோ அரம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் சுழற்சிங்கத்தின் திரு செல்லா ராகவேந்திரன் (DGN) அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

வீணை, பாட்டு, பரதநாட்டியம் என இனிதே ஆரம்பித்த கலை விழா பார்ப்பவர்களையும் பெற்றோர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மோகன கல்யாண் வீணையின் வாசிப்பை எல்லோரும் கேட்டு ரசித்தனர், குழந்தைகளின் பக்தி பாடல்கள் செவிக்கு விருந்தாய் அமைந்தது.

இளம் தளிர்களின் அழகான நடனம் ஸ்லோக பாடலுடன் தொடங்கியது.

மதுராஷ்டகம், காவடி சிந்து, புஷ்பாஞ்சலி, கீர்த்தனைகள், கவுத்துவம், கணேஷ் பஜனை, அலாரிப்பு, சிவன் மற்றும் மயூர அலாரிப்பு, அனுமன் சாலிசா ஆகியவை மிகவும் அழகாக நடனத்தில் லயிக்க வைத்தனர்.

See Also

வர்ணத்தில் சிவபுராணக் கதையை ஒரு சிற்பி போல செதுக்கி கண் முன் படைத்தனர்.

கண்ணப்ப நாயனார், மார்க்கண்டேயன், மன்மத தகனம் ஆகிய கதைகளை பக்தி சிறப்போடு கண்களுக்கு தங்கள் ஆடல் மூலம் விருந்து படைத்தனர்.

இறுதியாக மேற்கத்திய இசையில் பரத நடனத்தை புகுத்தி இணைவு நடனத்தை அரங்கேற்றி கலையரங்கத்தின் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top