Now Reading
வரும் கல்வியாண்டில் ரூ 2 கோடி கல்வி உதவித்தொகை கேபிஆர் தலைவர் அறிவிப்பு

வரும் கல்வியாண்டில் ரூ 2 கோடி கல்வி உதவித்தொகை கேபிஆர் தலைவர் அறிவிப்பு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி
உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கேபிஆர் குழுமத்தின் தலைவர் முனைவர் கே பி ராமசாமி தலைமையில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் கேபிஆர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் என 312 இளநிலை, முதுநிலை பொறியியல் முதலாமாண்டு மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ 2.40 கோடி கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு 1000க்கும்
மேற்பட்டோருக்கு மொத்தமாக ரூ 10 கோடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி முதல்வர் முனைவர் த சரவணன் அவர்கள் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் 5800
மாணவர்களுக்கு ரூ 23 கோடி வரை கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளதைக் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து பன்னாடு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொண்ட 3 பேராசிரியர்களுக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது.

தலைமையுரையாற்றிய கே பி ராமசாமி அவர்கள் மாணவர்கள் படிக்கும் 4 ஆண்டுகளும் எவ்வித
நெருக்கடியுமின்றி நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த கல்வி உதவித்தொகை வழங்கி வருவதாக பேசினார். மேலும் மாணவர்களின் வளர்ச்சிக்கு பன்மொழி மற்றும் பன்னாட்டு கலாச்சரத்தைக் கல்லூரியில் செயல்படுத்தி வருவதாக கூறினார்.

See Also
clock tower

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்வி ஆலோசகர் மற்றும் ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ் காந்தி
அவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் அசுர வளர்ச்சியை பற்றி பேசினார்.

மேலும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவது பற்றி கூறினார்.
விழாவில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். கடந்த ஆண்டு 952 மாணவ
மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top