Now Reading
Coimbatore Round Table celebrates Clock Day

Coimbatore Round Table celebrates Clock Day

Round Table Clock Tower

வடகோவை மேம்பாலத்தின் கீழ் உள்ள கடிகார கோபுரம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக புதுப்பிக்கப்பட்டது.. இந்நிலையில் ரவுண்ட் டேபிள் இந்தியா தினத்தை முன்னிட்டு இந்த கடிகார கோபுரத்தின் முன்பாக ஆர்.டி.ஐ கடிகார கோபுரம் நாள் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக வட கோவையில் கடிகார கோபுரம் நாள் கொண்டாட்டப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மனீஷ் லகோடியா கலந்து கொண்டார்.மேலும் விழாவில், கோவையின் மற்றும் ஏரியா செவன் கிளை தலைவர்கள் மற்றும் பிற பகுதி வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து,

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் குறித்த பிரச்சார வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது..இந்த வாகனம் கடந்த செப்., 11ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் துவங்கியதாகவும், நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 136 ரவுண்ட் டேபிள் அமைப்பு கிளைகள் உள்ள நகரங்களுக்கு இந்த வாகன பயணம் சென்று,.வரும் டிசம்பர் 16ம் தேதி, ராஞ்சியில் முடிவடைய உள்ளதாக ரவுண்ட் டேபிள் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்தனர்…

Round Table Clock Tower

See Also
Dump yard and corporation's management

 

 

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
© 2022 YOURCOIMBATORE. ALL RIGHTS RESERVED.
Scroll To Top